தேர்தல் விஞ்ஞாபனம் - 2010 

இன்றைய பாணியிலேயே இலங்கை அரசு தமிழ் மக்களின் உரிமைகளுக்கு உரிய கௌரவம் வழங்காத ஆட்சி முறையைத் தொடருமானால், தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை மீண்டும் வென்றெடுக்கத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்முறையற்ற காந்திய வழியிலான சட்டமறுப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுக்கும். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை தொடர்ந்தும் மறுக்கப்பட்டால், அரசியல், பொருளாதார, சமூக, கலாசார விடயங்களில் தமிழ் மக்கள் நேரடியாக தங்களைத் தாங்களே ஆளுகை செய்வதைத் தடுத்தால் தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதோடு சர்வதேச சமூகம் வேறு தீர்க்கமான செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும் என்று கோருவதற்கு வழி அமைப்பதாக இருக்கும் [ மேலும் ]

உங்கள் வாக்கு வீட்டுக்கு

x 

 
Kfg;GNjh;jy; tpQ;Qhgdk;Ntl;ghsh;fs;epoy;glk;njhlu;GClf mwpf;iffs;

வேட்பாளர் பட்டியல்

யாழ்ப்பாணம்

திருகோணமலை

மட்டக்களப்பு

அம்பாறை

வன்னி

அலுவலகம்

இலக்கம் 16 (30)
மார்ட்டின் வீதி, யாழ்ப்பாணம்
இலங்கை

தமிழர் தாயகக் கோட்பாட்டில், அதன் அடிப்படையில் உரிமையை வென்றெடுப் பதில் விட்டுக் கொடுப்புக்கோ இடமில்லை [19-03-2010]

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் வெற்றிலையும் சுயேச்சைகளும் வெற்றி பெற்றால் அரசாங்கம் இதுவரை செய்த கொடுமைகளைத் தமிழ்மக்கள் சரியெனக் கருதுகிறார்கள் என்று சர்வதேசம் ஏற்றுக் கொள்ள வழி செய்ததாகிவிடும். அதற்கு இடம்கொடுக்காதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். யாழ்.தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது பிர சாரக் கூட்டம் நேற்று மாலை ஆவரங்கால் சிவன்கோயிலுக்கு தெற்குப் பக்கமாக உள்ள வயல்வெளி மைதானத்தில் கே. சிவசோதி தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசுகையிலேயே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். (மேலும்)


எமது பிரதேசங்களின் அபிவிருத்திக்கும் சுயநிர்ணய உரிமை அவசியமானது : கூட்டமைப்பு வேட்பாளர் சரவணபவன் [19-03-2010]

வடக்கு கிழக்கில் நாம் எந்த அபிவிருத்தியை மேற்கொள்ள வேண்டுமென்றாலும் அதனைச் சுயநிர்ணய உரிமையுடன்தான் மேற்கொள்ள முடியும். அதாவது அபிவிருத்தித் திட்டங்களை நாமே சுயமாக நிர்ணயித்து அவற்றை நிறைவேற்றும் பூரண உரிமை எங்களுக்கு இருக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரும் உதயன், சுடரொளி பத்திரிகைகளின் நிர்வாக இயக்குனருமான ஈ.சரவணபவன். மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ்.தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது பிரசாரக் கூட்டம் நேற்று முன்நாள் மாலை ஆவரங்கால் சிவன் கோயிலுக்கு அருகிலுள்ள மைதானத்தில் நடைபெற்றது. (மேலும்)

 
யாழ்பாணத் தேர்தல் மாவட்டம்







மட்டக்களப்பு

அம்பாறை

All Rights Reserved. © 2010 Tamil National Alliance (TNA)